caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Furqaan அத்தியாயம், வசனம் 59

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 42 · 25:59

ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ٱلرَّحْمَٰنُ فَسْـَٔلْ بِهِۦ خَبِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவன் பேரருளாளன். அவனை (-ரஹ்மானை) அறிந்தவனிடம் கேட்பீராக! (நான்தான் அறிந்தவன். நான் அவனை (-ரஹ்மானை)ப் பற்றி அறிவித்தால் அது நான் அறிவித்தது போன்றே.)
Tamil Translation - Omar Sharifஅவன்தான் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு இடையில் உள்ள (எல்லா)வற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவன் மகா கருணையுள்ள பேரருளாளன் ஆவான். ஆக, அவனை நன்கு அறிந்தவனிடம் (அவனைப் பற்றி) கேட்பீராக! (அல்லாஹ்வை அவனே அறிந்தவன். அவனை அன்றி யாரும் சரியாக, முழுமையாக அவனை அறிய முடியாது. ஆகவே, அவன் தன்னைப் பற்றி கூறுவதை நபியே! நீர் நம்பிக்கை கொள்வீராக!)
Tamil Translation - Abdulhamid Baqawi59. அவன் எத்தகையவனென்றால் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அவன் ‘அர்ஷின்' மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன்). இதைப் பற்றித் தெரிந்தவர்களைக் கேட்டறிந்து கொள்வீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70