وَقَالُوٓا۟ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ ٱكْتَتَبَهَا فَهِىَ تُمْلَىٰ عَلَيْهِ بُكْرَةً وَأَصِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் கூறினர்: (இந்த குர்ஆன்) முன்னோரின் கட்டுக் கதைகள். அவர் இவற்றை எழுதிக்கொண்டார். இவை அவர் மீது காலையிலும் மாலையிலும் எடுத்தியம்பப்படுகிறது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், கூறினார்கள்: (இந்த குர்ஆன்) முன்னோரின் கட்டுக் கதைகளாகும். அவர் இவற்றை தானாக எழுதிக்கொண்டார். ஆக, இவை காலையிலும் மாலையிலும் அவர் மீது படித்துக்காட்டப்படுகிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi5.‘‘இது முன்னோர்களின் கட்டுக்கதைகள். காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கிறார்'' என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர்.