caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Furqaan அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 42 · 25:4

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّآ إِفْكٌ ٱفْتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيْهِ قَوْمٌ ءَاخَرُونَ فَقَدْ جَآءُو ظُلْمًا وَزُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்: “இது (-இந்த குர்ஆன்) இட்டுக்கட்டப்பட்டதே தவிர வேறு இல்லை. இவர் (-இந்த தூதர்) இதை இட்டுக்கட்டினார். இவருக்கு மற்ற மக்கள் இதற்கு உதவினர்.” ஆகவே, திட்டமாக இவர்கள் பெரும் அநியாயத்திற்கும் பொய்யுக்கும் வந்தனர்.
Tamil Translation - Omar Sharifநிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “இ(ந்த வேதமான)து இட்டுக்கட்டப்பட்டதே தவிர வேறு இல்லை. இன்னும், இவர் (-இந்த தூதர்) இதை இட்டுக்கட்டினார். இவருக்கு மற்ற மக்கள் இதற்கு உதவினர்.” ஆக, திட்டமாக இவர்கள் பெரும் அநியாயத்தையும் பொய்யையும் கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. ‘‘ (திருகுர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே தவிர, வேறில்லை. இ(தைக் கற்பனை செய்வ)தில் வேறு மக்கள் அவருக்கு உதவி புரிகின்றனர்'' என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நிராகரிப்பவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக) அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70