وَقَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا لَوْلَآ أُنزِلَ عَلَيْنَا ٱلْمَلَٰٓئِكَةُ أَوْ نَرَىٰ رَبَّنَا لَقَدِ ٱسْتَكْبَرُوا۟ فِىٓ أَنفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநமது சந்திப்பை ஆதரவு (நம்பிக்கை) வைக்காதவர்கள் கூறினர்: எங்கள் மீது வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது நாங்கள் எங்கள் இறைவனை பார்க்க வேண்டாமா? திட்டவட்டமாக அவர்கள் தங்களுக்குள் பெருமை அடித்தனர். இன்னும் மிகப் பெரிய அளவில் கடுமையாக அழிச்சாட்டியம் (சண்டித்தனம், மூர்க்கத்தனம்) செய்தனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நமது சந்திப்பை ஆசை வைக்காதவர்கள் கூறினார்கள்: “எங்களிடம் வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது, நாங்கள் எங்கள் இறைவனை பார்க்க வேண்டுமே?” திட்டவட்டமாக அவர்கள் தங்களுக்குள் கர்வம் கொண்டனர். இன்னும், மிகப் பெரிய அளவில் கடுமையாக அழிச்சாட்டியம் செய்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. (மறுமை நாளில்) நம்மைச் சந்திப்பதை எவர்கள் நம்பவில்லையோ அவர்கள், ‘‘ எங்கள் மீது (நேரடியாகவே) வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது (எங்கள் கண்களால்) எங்கள் இறைவனைப் பார்க்க வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். இவர்கள் தங்களை மிக மிகப் பெரிதாக எண்ணிக்கொண்டு அளவு கடந்து (பெரும் பாவத்தில் சென்று) விட்டனர்.