فَقَدْ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسْتَطِيعُونَ صَرْفًا وَلَا نَصْرًا وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, திட்டமாக இவர்கள் (-வானவர்கள், நபிமார்கள் மற்றும் நல்லவர்கள்) நீங்கள் கூறியதில் உங்களை பொய்ப்பித்து விட்டனர். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை தங்களை விட்டு) திருப்பி விடுவதற்கோ (தங்களுக்கு) உதவுவதற்கோ சக்தி பெறமாட்டீர்கள். உங்களில் யார் (இணைவைத்து தனக்குத்தானே) அநீதி இழைத்துக் கொண்டாரோ அவருக்கு பெரிய தண்டனையை சுவைக்க வைப்போம்.
Tamil Translation - Omar Sharifஆக, திட்டமாக அவர்கள் (-வானவர்கள், நபிமார்கள் மற்றும் நல்லவர்கள்) நீங்கள் கூறியதில் உங்களை பொய்ப்பித்து விட்டனர். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை உங்களை விட்டு) திருப்பி விடுவதற்கோ (உங்களுக்கு) உதவுவதற்கோ சக்தி பெறமாட்டீர்கள். இன்னும், உங்களில் யார் (அல்லாஹ்விற்கு இணைவைத்து வணங்கி தனக்குத்தானே) அநீதி இழைத்தாரோ அவருக்கு பெரிய தண்டனையை நாம் சுவைக்க வைப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. (ஆகவே, அந்த நிராகரிப்பவர்களை நோக்கி ‘‘ உங்களை வழி கெடுத்தவை இவைதான் என்று) நீங்கள் கூறியதை இவையே பொய்யாக்கி விட்டன. ஆதலால், (நம் வேதனையைத்) தட்டிக் கழிக்கவும் உங்களால் முடியாது. (இவற்றின்) உதவியைப் பெற்றுக் கொள்ளவும் உங்களால் முடியாது.. ஆகவே, உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ அவன் பெரும் வேதனையைச் சுவைக்கும்படி நிச்சயமாக நாம் செய்வோம்'' (என்று கூறுவோம்).