caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Furqaan அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 42 · 25:18

قَالُوا۟ سُبْحَٰنَكَ مَا كَانَ يَنۢبَغِى لَنَآ أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنْ أَوْلِيَآءَ وَلَٰكِن مَّتَّعْتَهُمْ وَءَابَآءَهُمْ حَتَّىٰ نَسُوا۟ ٱلذِّكْرَ وَكَانُوا۟ قَوْمًۢا بُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறுவர்: நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி பாதுகாவலர்களை (தெய்வங்களை) எடுத்துக் கொள்வது எங்களுக்கு தகுதியானதாக (சரியானதாக) இல்லை. எனினும், நீ அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் (வாழ்க்கையில்) சுகமளித்தாய். இறுதியாக, அவர்கள் (உனது) அறிவுரையை மறந்தனர். இன்னும் அழிந்து போகும் மக்களாக ஆகிவிட்டனர்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (-வானவர்களும் ஈஸாவும் உஸைரும்) கூறுவார்கள்: “நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி பாதுகாவலர்களை (தெய்வங்களை) எடுத்துக் கொள்வது எங்களுக்கு தகுதியானதாக (சரியானதாக) இல்லை. எனினும், நீ அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் (உலகத்தில்) வசதியான வாழ்வளித்தாய். இறுதியாக, அவர்கள் (உனது) அறிவுரையை மறந்தனர். இன்னும், அழிந்து போகும் மக்களாக ஆகிவிட்டனர்.”
Tamil Translation - Abdulhamid Baqawi18. அதற்கு அவை (இறைவனை நோக்கி) ‘‘ நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னைத் தவிர (மற்றெவரையும்) நாங்கள் எங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்வது எங்களுக்குத் தகுதியல்ல. எனினும், நீதான் அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் சுகபோகத்தைக் கொடுத்தாய். அதனால் அவர்கள் (உன்னை) நினைப்பதை(யும் உனது அறிவுரையையும்) மறந்து (பாவங்களில் மூழ்கி) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள்'' என்று அவை கூறும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70