وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَقُولُ ءَأَنتُمْ أَضْلَلْتُمْ عِبَادِى هَٰٓؤُلَآءِ أَمْ هُمْ ضَلُّوا۟ ٱلسَّبِيلَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியவர்களையும் (வானவர்களையும் ஈஸாவையும் உஸைரையும்) எழுப்பும் நாளின் போது, நீங்கள்தான் எனது இந்த அடியார்களை வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்கள் (நேரான) பாதையை தாமாக தவறவிட்டனரா? என்று (இறைவன்) கேட்பான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியவர்களையும் ஒன்று திரட்டும் நாளில், “நீங்கள்தான் எனது (இந்த) அடியார்களை வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்கள் (நேரான) பாதையை விட்டு தாமாக வழிகெட்டனரா?” என்று (இறைவன்) கேட்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. (இணைவைத்து வணங்கிய) அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கும் நாளில், ‘‘ என் இவ்வடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி தவறி சென்று விட்டனரா'' என்று (இறைவன்) கேட்பான்.