caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Noor அத்தியாயம், வசனம் 6

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 102 · 24:6

وَٱلَّذِينَ يَرْمُونَ أَزْوَٰجَهُمْ وَلَمْ يَكُن لَّهُمْ شُهَدَآءُ إِلَّآ أَنفُسُهُمْ فَشَهَٰدَةُ أَحَدِهِمْ أَرْبَعُ شَهَٰدَٰتٍۭ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர்கள் தங்களது மனைவிகளை (விபசாரிகள் என்று) ஏசுகிறார்களோ அவர்களிடம் அவர்களைத் தவிர சாட்சிகள் (வேறு) இல்லையோ, அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக தான் உண்மை கூறுபவர்களில் (ஒருவன்)தான்” என்று நான்கு முறை சாட்சிகள் சொல்ல வேண்டும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் தங்களது மனைவிகள் மீது விபச்சார குற்றம் சுமத்துகிறார்களோ; இன்னும், அவர்களிடம் அவர்களைத் தவிர சாட்சிகள் (வேறு) இல்லையோ, ஆக, அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக தான் உண்மை கூறுபவர்களில் உள்ளவன்தான்” என்று நான்கு முறை சாட்சி சொல்ல வேண்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. எவர்கள் தங்கள் மனைவிகள் மீது (விபசாரத்தைக் கொண்டு) குற்றம் கூறித் தங்களைத் தவிர அவர்களிடம் (நான்கு) சாட்சிகள் இல்லாமல் இருந்தால் அதற்காக அச்சமயம் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70