وَلَقَدْ أَنزَلْنَآ إِلَيْكُمْ ءَايَٰتٍ مُّبَيِّنَٰتٍ وَمَثَلًا مِّنَ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக உங்களுக்கு தெளிவான வசனங்களையும் உங்களுக்கு முன்னர் சென்றவர்களின் உதாரணத்தையும் இறையச்சமுள்ளவர்களுக்கு உபதேசத்தையும் இறக்கியுள்ளோம்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக உங்களுக்கு தெளிவான வசனங்களையும் உங்களுக்கு முன்னர் (வாழ்ந்து) சென்றவர்களின் உதாரணத்தையும் இறையச்சமுள்ளவர்களுக்கு உபதேசத்தையும் இறக்கி இருக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. நிச்சயமாக நாம் உங்களுக்குத் தெளிவான வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றவர்களின் உதாரணங்களையும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசங்களையும் (இதில்) இறக்கி வைத்திருக்கிறோம்;