قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا۟ مِنْ أَبْصَٰرِهِمْ وَيَحْفَظُوا۟ فُرُوجَهُمْ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا يَصْنَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை (அல்லாஹ் வெறுப்பதை பார்ப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளட்டும், தங்கள் மறைவிடங்களை (பிறர் பார்வைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளட்டும். அது அவர்களுக்கு மிக சுத்தமானது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை (தங்களுக்கு ஆகாததை பார்ப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் மறைவிடங்களை (பிறர் பார்வைகளிலிருந்தும் பாவத்திலிருந்தும்) பாதுகாத்துக் கொள்ளட்டும். அதுதான் அவர்களுக்கு மிக சுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்வதை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. (நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.