إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلْفَٰحِشَةُ فِى ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அசிங்கமான செயல் நம்பிக்கையாளர்களுக்கிடையில் பரவுவதை விரும்பக்கூடியவர்கள் -அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வலி தரக்கூடிய தண்டனை உண்டு. அல்லாஹ்தான் அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக (விபச்சாரம், ஆபாசங்கள், பழிபோடுதல் போன்ற) அசிங்கமான செயல்(கள்) நம்பிக்கையாளர்களுக்கிடையில் பரவுவதை எவர்கள் விரும்புவார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இம்மையிலும் மறுமையிலும் உண்டு. அல்லாஹ்தான் (உங்களுக்கு நன்மை தரும் சட்டங்களை) நன்கறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக்கு இடையில் மானக்கேடான செயல்கள் பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.