caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Noor அத்தியாயம், வசனம் 2

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 102 · 24:2

ٱلزَّانِيَةُ وَٱلزَّانِى فَٱجْلِدُوا۟ كُلَّ وَٰحِدٍ مِّنْهُمَا مِا۟ئَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِى دِينِ ٱللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآئِفَةٌ مِّنَ ٱلْمُؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவிபசாரி இன்னும் விபசாரன் அவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு அடி அடியுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தில் அந்த இருவர் மீது உங்களை இரக்கம் பிடித்துவிட வேண்டாம் நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால். நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டம் அவ்விருவரின் தண்டனைக்கு ஆஜராகட்டும்.
Tamil Translation - Omar Sharifவிபச்சாரி; இன்னும், விபச்சாரன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு பிரம்படி அடியுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தில் (அதன் சட்டத்தை நிறைவேற்றும்போது) அந்த இருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் வந்துவிட வேண்டாம், நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால். இன்னும், நம்பிக்கையாளர்களில் ஒரு பெரும் கூட்டம் அவ்விருவரின் தண்டனை (நிறைவேறுகின்ற இடத்து)க்கு ஆஜராகட்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில், அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70