ٱلزَّانِى لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு விபசாரன் ஒரு விபசாரியுடன் அல்லது இணைவைப்பவள் ஒருத்தியுடன் தவிர (மற்றவளுடன்) உ(டலு)றவு வைக்க மாட்டான். விபசாரி - அவளுடன் ஒரு விபசாரன் அல்லது இணைவைப்பவன் ஒருவனைத் தவிர (மற்றவர்) உ(டலு)றவு வைக்கமாட்டான். இது (-விபசாரம் செய்வது) நம்பிக்கையாளர்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.
Tamil Translation - Omar Sharifவிபச்சாரன், ஒரு விபச்சாரியுடன்; அல்லது, இணைவைப்பவளுடன் தவிர (மற்றவளுடன்) உ(டலு)றவு வைக்க மாட்டான். இன்னும், விபச்சாரியாக இருப்பவள், - அவளுடன் ஒரு விபச்சாரன்; அல்லது, இணைவைப்பவன் ஒருவனைத் தவிர (மற்றவர்) உ(டலு)றவு வைக்க மாட்டான். இது (-விபச்சாரம் செய்வது) நம்பிக்கையாளர்களுக்கு ஹராம் - தடுக்கப்பட்டுள்ளது.
Tamil Translation - Abdulhamid Baqawi3. (கேவலமான) ஒரு விபசாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபசாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணைத் தவிர (மற்றெவளையும்) திருமணம் செய்ய முடியாது. (அவ்வாறே) ஒரு விபசாரி (கேவலமான) ஒரு விபசாரனை அல்லது இணைவைத்து வணங்கும் ஓர் ஆணைத் தவிர (மற்றெவனையும்) திருமணம் செய்ய முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது.