caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Noor அத்தியாயம், வசனம் 11

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 102 · 24:11

إِنَّ ٱلَّذِينَ جَآءُو بِٱلْإِفْكِ عُصْبَةٌ مِّنكُمْ لَا تَحْسَبُوهُ شَرًّا لَّكُم بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْ لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُم مَّا ٱكْتَسَبَ مِنَ ٱلْإِثْمِ وَٱلَّذِى تَوَلَّىٰ كِبْرَهُۥ مِنْهُمْ لَهُۥ عَذَابٌ عَظِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இட்டுக்கட்டியவர்கள் உங்களில் உள்ள ஒரு குழுவினர்தான். அதை (இட்டுக்கட்டிய செய்தியை) உங்களுக்கு தீமையாக கருதாதீர்கள். மாறாக, அது உங்களுக்கு நன்மைதான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் பாவத்தில் அவர் செய்தது (-அதன் தண்டனை) உண்டு. அவர்களில் அதில் பெரியதை செய்தவர் (-இட்டுக் கட்டுவதில் பெரும் பங்களிப்பு வகித்தவர்) அவருக்கு பெரும் தண்டனை உண்டு.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக (நபியின் மனைவியின் மீது) இட்டுக்கட்டியவர்கள் உங்களில் உள்ள ஒரு குழுவினர்தான். அதை உங்களுக்கு தீமையாக கருதாதீர்கள். மாறாக, அதுவும் உங்களுக்கு ஒரு நன்மைதான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் - பாவத்தில் அவர் எதை செய்தாரோ - அதனுடைய தண்டனை உண்டு. இன்னும், அவர்களில் யார் அதில் (-இட்டுக்கட்டுவதில்) பெரியதை பொறுப்பெடுத்து செய்தாரோ (-இந்த பழியை அதிகம் பரப்பினாரோ) அவருக்கு பெரிய தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi11. எவர்கள் (ஆயிஷா (ரழி) மீது பொய்யாக) அவதூறு கூறினார்களோ அவர்களும் உங்களிலுள்ள ஒரு கூட்டத்தினர்தான்! (நம்பிக்கையாளர்களே!) அதனால் உங்களுக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டு விட்டதாக நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கும் நன்மையாகவே முடிந்தது. (அவதூறு கூறியவர்கள்) ஒவ்வொருவருக்கும் அவர்கள் (அவதூறு கூறித்) தேடிக் கொண்ட பாவத்துக்குத் தக்க தண்டனை(யாக எண்பது கசையடிகள்) உண்டு. இந்த அவதூறில் அவர்களில் எவன் பெரும் பங்கெடுத்துக் கொண்டானோ அவனுக்கு (இத்தண்டனையும்) இன்னும் கடுமையான வேதனையுமுண்டு.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70