لَّوْلَآ إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ ٱلْمُؤْمِنُونَ وَٱلْمُؤْمِنَٰتُ بِأَنفُسِهِمْ خَيْرًا وَقَالُوا۟ هَٰذَآ إِفْكٌ مُّبِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் அதைக் கேட்டபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி (தங்களில் இட்டுக்கட்டப்பட்டவரைப் பற்றி) நல்லதை எண்ணியிருக்க வேண்டாமா! இன்னும் இது தெளிவான இட்டுக்கட்டாகும் (பொய்யாகும்) என்று சொல்லியிருக்க வேண்டாமா!
Tamil Translation - Omar Sharifநீங்கள் அதைக் கேட்டபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி (-தங்களில் யார் மீது ஆதாரமின்றி இட்டுக்கட்டப்பட்டதோ அவரைப் பற்றி) நல்லதை எண்ணியிருக்க வேண்டாமா! இன்னும், இது தெளிவான இட்டுக்கட்டப்பட்ட (பொய்யான) செய்தியாகும் என்று சொல்லியிருக்க வேண்டாமா!
Tamil Translation - Abdulhamid Baqawi12. இதை நீங்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில் (இதை மறுத்து) நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் வைத்து ‘‘இது பகிரங்கமான அவதூறே'' என்று கூறியிருக்க வேண்டாமா?