وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِۦ فَقَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥٓ أَفَلَا تَتَّقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக நூஹை அவருடைய மக்களிடம் நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: எனது மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனையன்றி (வணங்கத் தகுதியான) கடவுள் உங்களுக்கு (வேறு) யாரும் இல்லை. நீங்கள் (அவனுடைய தண்டனையை) அஞ்ச வேண்டாமா?
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக நூஹை அவருடைய மக்களிடம் நாம் அனுப்பினோம். ஆக, அவர் கூறினார்: எனது மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. நீங்கள் (அவனுடைய தண்டனையை) அஞ்ச வேண்டாமா?
Tamil Translation - Abdulhamid Baqawi23. நிச்சயமாக நாம் ‘‘நூஹ்' (நபியை) நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார்.