caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:24

فَقَالَ ٱلْمَلَؤُا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ مَا هَٰذَآ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَٰٓئِكَةً مَّا سَمِعْنَا بِهَٰذَا فِىٓ ءَابَآئِنَا ٱلْأَوَّلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருடைய மக்களில் நிராகரித்த தலைவர்கள் கூறினர்: இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறு இல்லை. அவர் உங்கள் மீது மேன்மை அடைய நாடுகிறார். அல்லாஹ் நாடியிருந்தால் வானவர்களை இறக்கி இருப்பான். இதை எங்கள் முன்னோர்களான மூதாதைகளில் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
Tamil Translation - Omar Sharifஆக, அவருடைய மக்களில் நிராகரித்து கொண்டிருந்த பிரமுகர்கள் கூறினார்கள்: இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர இல்லை. அவர் உங்களைப் பார்க்கிலும் மேன்மை அடைய நாடுகிறார். இன்னும், அல்லாஹ் நாடியிருந்தால் வானவர்க(ளுக்கு தூதுத்துவத்தை கொடுத்து அவர்க)ளை (பூமியில் உங்களுக்கு தூதர்களாக) இறக்கி இருப்பான். இதை, எங்கள் முன்னோர்களான மூதாதைகளில் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi24. அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தமது மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் வானவர்களையே அனுப்பிவைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70