لَعَلِّىٓ أَعْمَلُ صَٰلِحًا فِيمَا تَرَكْتُ كَلَّآ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآئِلُهَا وَمِن وَرَآئِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இன்றைய தினத்திற்கு முன் அமல்களில்) நான் விட்டுவிட்டவற்றிலிருந்து (சில) நல்ல அமல்களை(யாவது) நான் செய்வதற்காக (என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்பு). ஒரு போதும் அவ்வாறு அல்ல. (உலகத்திற்கு அவன் அனுப்பப்படவே மாட்டான். என்னை உலகிற்கு அனுப்புங்கள் என்ற) இது ஒரு வீண் பேச்சாகும். அவன் அதைக் கூறிக்கொண்டே இருப்பான். அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள்வரை அவர்களுக்கு முன் ஒரு தடை இருக்கிறது. (அவர்கள் உலகிற்கு திரும்புவதிலிருந்து அது அவர்களை தடுத்துவிடும்.)
Tamil Translation - Omar Sharif(அமல்களில்) நான் விட்டவற்றிலிருந்து (சில) நல்ல அமல்களை(யாவது) நான் செய்வதற்காக (என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்புவாயாக! என்று அவன் கூறுவான்). ஒரு போதும் அவ்வாறு அல்ல. (உலகத்திற்கு அவன் அனுப்பப்படவே மாட்டான். என்னை உலகிற்கு அனுப்புவாயாக என்ற பேச்சு) நிச்சயமாக இது ஒரு வீண் பேச்சாகும். அவன் அதைக் கூறிக்கொண்டே இருப்பான். இன்னும், அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை அவர்களுக்கு முன் ஒரு தடை இருக்கிறது. (ஆகையால் அவர்கள் உலகிற்கு திரும்ப முடியாது.)
Tamil Translation - Abdulhamid Baqawi100. நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்'' என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (தவிர வேறில்லை). அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை அதில் தங்கிவிடுவார்கள்.