caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 8

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:8

وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِى ٱللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَٰبٍ مُّنِيرٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் விஷயத்தில் (-அவன் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற விஷயத்தில்) எவ்வித அறிவுமில்லாமலும் நேர்வழி (-தெளிவான விளக்கம் ஆதாரம்) இல்லாமலும் (அவனுடைய வாதத்தை) வெளிப்படுத்தக்கூடிய (-தெளிவுபடுத்தக்கூடிய இறை)வேதமும் இல்லாமலும் தர்க்கிப்பவர் மனிதர்களில் இருக்கின்றார்.
Tamil Translation - Omar Sharifஎவ்வித கல்வி அறிவுமில்லாமலும் நேர்வழி இல்லாமலும் (தனது வாதத்தை) வெளிப்படுத்தக்கூடிய (இறை)வேதம் (தன்னிடம்) இல்லாமலும் அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கிப்பவர்கள் மனிதர்களில் இருக்கிறார்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. மனிதர்களில் பலர் (இருக்கின்றனர். அவர்கள்) எந்தவித கல்வியும், தர்க்கரீதியான ஆதாரமும், வேத நூலின் தெளிவான ஆதாரமும் இல்லாமலே அவர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70