caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 9

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:9

ثَانِىَ عِطْفِهِۦ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُۥ فِى ٱلدُّنْيَا خِزْىٌ وَنُذِيقُهُۥ يَوْمَ ٱلْقِيَٰمَةِ عَذَابَ ٱلْحَرِيقِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதனது கழுத்தைத் திருப்பியவனாக (-பெருமையடித்து புறக்கணித்தவனாக) அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து (நம்பிக்கையாளர்களை) தடுப்பதற்காக (அவன் அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கிக்கின்றான். அவனுக்கு இவ்வுலகத்தில் கேவலம் (-தண்டனை) உண்டு. மறுமை நாளில் பொசுக்கக்கூடிய வேதனையை நாம் அவனுக்கு சுவைக்க வைப்போம். (அவனை நெருப்பால் பொசுக்குவோம்.)
Tamil Translation - Omar Sharif(பெருமையுடன்) தனது கழுத்தைத் திருப்பிய(வனாக, இன்னும் புறக்கணித்த)வனாக அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து (நம்பிக்கையாளர்களை) தடுப்பதற்காக (அல்லாஹ்வின் விஷயத்தில் அவன் உங்களிடம் தர்க்கிக்கிறான்). அவனுக்கு இவ்வுலகத்தில் கேவலம் (நிறைந்த தண்டனை) உண்டு. இன்னும், மறுமை நாளில் எரித்து பொசுக்கக்கூடிய தண்டனையை நாம் அவனுக்கு சுவைக்க செய்வோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு இவ்வாறு தர்க்கிக்கின்றனர்). இம்மையில் அவர்களுக்கு இழிவுதான். மறுமை நாளிலோ சுட்டெரிக்கும் நெருப்பின் வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70