أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِى ٱلْأَرْضِ وَٱلْفُلْكَ تَجْرِى فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ وَيُمْسِكُ ٱلسَّمَآءَ أَن تَقَعَ عَلَى ٱلْأَرْضِ إِلَّا بِإِذْنِهِۦٓ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியில் உள்ளவற்றை உங்களுக்கு வசப்படுத்தியுள்ளான். இன்னும் கப்பலையும் -அவனது கட்டளைப்படி அது கடலில் செல்கின்றதாக (உங்களுக்கு வசப்படுத்தியுள்ளான்). வானத்தை -அவனது கட்டளையைக் கொண்டே தவிர- அது பூமியின் மீது வீழ்ந்து விடாமல் தடுத்திருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மகா இரக்கமுள்ளவன், பெரும் கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியில் உள்ளவற்றை உங்களுக்கு வசப்படுத்தியுள்ளான். இன்னும், அவனது கட்டளைப்படி கடலில் செல்லக்கூடிய கப்பல்களையும் (உங்களுக்கு வசப்படுத்தியுள்ளான்). இன்னும், வானத்தை - அது பூமியின் மீது வீழ்ந்து விடாமல் - தடுத்து வைத்திருக்கிறான். அவனுடைய அனுமதி இல்லாமல் அது விழாது. நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மகா இரக்கமுள்ளவன், பெரும் கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கிறான். கப்பல் அவனுடைய கட்டளைப்படி கடலில் செல்கிறது. தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழாது அவன் தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமுடையவன், கருணையுடையவன் ஆவான்.