ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ وَأَنَّ ٱللَّهَ سَمِيعٌۢ بَصِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது (பாதிக்கப்பட்டவருக்கு நான் செய்த உதவி ஏனெனில் நான் அதற்கு ஆற்றல் உள்ளவன்). இன்னும் நிச்சயமாக அல்லாஹ் இரவை பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். இன்னும் (இப்படிப்பட்ட ஆற்றல் உள்ளவன் நம்பிக்கையாளர்களுக்கும் உதவி புரிய ஆற்றல் உடையவன்.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஅ(நீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுவது எனக்கு மிக இலகுவான)து, ஏனெனில், (நான் அதற்கு ஆற்றல் உள்ளவன் ஆவேன். இன்னும்) நிச்சயமாக அல்லாஹ்(வின் வல்லமையாவது அவன்) இரவை பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் (அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனையை) நன்கு செவியுறுபவன், (அவரின் நிலையை) உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi61. இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைய வைக்(க ஆற்றலுடையவனாக இருக்)கிறான். (அதைப் போன்றே துன்புறுத்தும் கெட்டவனை நல்லவனாகவும், துன்பத்திற்குள்ளான நல்லவனைக் கெட்டவனாகவும் ஆக்கி விடுகிறான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.