ذَٰلِكَ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِىَ عَلَيْهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது... (-அல்லாஹ் வாக்களித்த சொர்க்கம் அவர்களுக்கு உண்டு அத்துடன்) எவர் தான் தண்டிக்கப்பட்டதைப் போன்று தண்டித்துவிட, பிறகு தன்மீது (மீண்டும்) வன்முறை செய்யப்பட்டதோ நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் பிழை பொறுப்பாளன்.
Tamil Translation - Omar Sharifஅது, (நம்பிக்கையாளர்கள் சொர்க்கம் செல்வது அல்லாஹ்வின் வெகுமதியாகும்). இன்னும், எவர் தான் தண்டிக்கப்பட்டதைப் போன்று (தன்னைத் தண்டித்தவரை) தண்டித்தாரோ, பிறகு, அவர் மீது (மீண்டும்) வன்முறை செய்யப்பட்டதோ நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் பிழை பொறுப்பாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. இவ்வாறே (காரியம் நடைபெறும்). எவரேனும் தான் துன்புறுத்தப்பட்ட அதே அளவுக்கு பழி வாங்கிய பிறகு, மீண்டும் (முதல் துன்புறுத்திய) அவன் மீது அதிகம் அநியாயம் செய்யப்பட்டால் நிச்சயமாக அல்லாஹ் அ(நீதி இழைக்கப்பட்ட)வனுக்கு உதவி புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன் ஆவான்.