caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 54

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:54

وَلِيَعْلَمَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَيُؤْمِنُوا۟ بِهِۦ فَتُخْبِتَ لَهُۥ قُلُوبُهُمْ وَإِنَّ ٱللَّهَ لَهَادِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(முடிவில், அல்லாஹ்வின் மார்க்க) அறிவு கொடுக்கப்பட்டவர்கள் நிச்சயமாக இது (-அல்லாஹ் இறக்கிய வேதமும் ஷைத்தான் கூறியதை நீக்கி வேத வசனங்களை சுத்தப்படுத்தி உறுதிப்படுத்தியதும்) உமது இறைவன் புறத்திலிருந்து நிகழ்ந்த உண்மைதான் என்று அறிந்து அதை நம்பிக்கை கொண்டு அவர்களுடைய உள்ளங்கள் அதற்கு (-அந்த குர்ஆனுக்கு) பணிந்து விடும். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டக்கூடியவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், முடிவில் (அல்லாஹ்வின் மார்க்க) அறிவு கொடுக்கப்பட்டவர்கள் நிச்சயமாக இது உமது இறைவன் புறத்திலிருந்து நிகழ்ந்த உண்மைதான் என்று அறிந்து அதை நம்பிக்கை கொண்டு அவர்களுடைய உள்ளங்கள் அதற்கு (-அந்த குர்ஆனுக்கு) பணிந்து விடும். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டக் கூடியவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi54. எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய உள்ளங்கள் பணிந்து அவனுக்கு கட்டுப்பட்டுவிடும். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களைத்தான், அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70