وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى مِرْيَةٍ مِّنْهُ حَتَّىٰ تَأْتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةً أَوْ يَأْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரித்தவர்கள், அவர்களிடம் மறுமை திடீரென வருகின்றவரை அல்லது ஒரு மலட்டு நாளின் (-பத்ரு போரின்) வேதனை அவர்களிடம் வருகின்ற வரை இதில் (இந்த குர்ஆனில்) சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifநிராகரித்தவர்கள், மறுமை திடீரென அவர்களிடம் வரும் வரை; அல்லது, ஒரு மலட்டு நாளின் (-பத்ர் போரினால் அவர்கள் அனுபவிக்கப் போகும்) தண்டனை அவர்களிடம் வரும் வரை இ(ந்த வேதத்)தில் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. (எனினும்) நிராகரிப்பவர்கள் தங்களிடம் திடீரென்று மறுமை (நாள்) வரும் வரை அல்லது கடினமான வேதனையுடைய நன்மையற்ற நாள் அவர்களிடம் வரும்வரை இதைப் பற்றிச் சந்தேகத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள்.