ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى ٱلْقُلُوبِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவைதான் (சிலைகளை விட்டும் பொய் பேச்சை விட்டும் விலகுவது, அல்லாஹ்விற்கு பணிவது, இணைவைப்பதிலிருந்து விலகி இருப்பது உள்ளத்தின் இறையச்சத்தைச் சேர்ந்ததாகும்). இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ (-குர்பானி பிராணிகளை அழகிய முறையில் பராமரித்து அவற்றை கொழுக்க வைப்பாரோ, ஹஜ்ஜுடைய கடமைகளை அல்லாஹ் ஏவிய முறையில் செய்வாரோ) நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து உள்ளவையாகும்.
Tamil Translation - Omar Sharifஇவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து வெளிப்படக் கூடியதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவருடைய உள்ளத்தின் இறையச்சத்தை அறிவிக்கிறது.