caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 31

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:31

حُنَفَآءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِهِۦ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ ٱلسَّمَآءِ فَتَخْطَفُهُ ٱلطَّيْرُ أَوْ تَهْوِى بِهِ ٱلرِّيحُ فِى مَكَانٍ سَحِيقٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்விற்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களாக அவனுக்கு (எதையும்) இணையாக்காதவர்களாக (இருங்கள்). எவர் அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பாரோ அவர் வானத்திலிருந்து கீழே விழுந்து, பிறகு பறவைகள் அவரைக் கொத்திச் சென்றவரைப் போன்று அல்லது காற்று அவரை தூரமான இடத்தில் எறிந்தவரைப் போன்றவராவார்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்விற்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களாக, அவனுக்கு (எதையும்) இணையாக்காதவர்களாக இருங்கள். இன்னும், எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ அவர் வானத்திலிருந்து கீழே விழுந்து, (அவர் இறந்த) பிறகு பறவைகள் அவரை கொத்தி தின்றதைப் போன்று; அல்லது, காற்று அவரை தூரமான இடத்தில் வீசி எறிந்ததைப் போன்று ஆவார்.
Tamil Translation - Abdulhamid Baqawi31. அல்லாஹ்வுக்கு இணைவைக்காது, அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து விடுங்கள். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து (தலைகீழாக) விழுந்தவனைப் போலாவான். அவனை (கழுகு போன்ற) பறவைகள் இறாஞ்சி (கொத்தி)க் கொண்டு போய்விடும் அல்லது காற்று வெகு தூரத்திற்கு அடித்துக் கொண்டு சென்றுவிடும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70