ثُمَّ لْيَقْضُوا۟ تَفَثَهُمْ وَلْيُوفُوا۟ نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا۟ بِٱلْبَيْتِ ٱلْعَتِيقِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவர்கள் தங்களது அழுக்குகளை நீக்கிக் கொள்ளட்டும். தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும். மிகப் பழமையான வீட்டை அவர்கள் தவாஃப் (சுற்றி அல்லாஹ்வை வழிபாடு) செய்யட்டும்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அவர்கள் தங்களது (உடல்களில் இருந்து) அழுக்குகளை நீக்கிக் கொள்ளட்டும். இன்னும், தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும். இன்னும், மிகப் பழமையான இறையாலத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தரித்து, குளித்துத்) தங்கள் அழுக்குகளைச் சுத்தம் செய்து, தங்கள் நேர்ச்சைகளையும் நிறைவேற்றி, கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள்.