caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 11

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:11

وَمِنَ ٱلنَّاسِ مَن يَعْبُدُ ٱللَّهَ عَلَىٰ حَرْفٍ فَإِنْ أَصَابَهُۥ خَيْرٌ ٱطْمَأَنَّ بِهِۦ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ ٱنقَلَبَ عَلَىٰ وَجْهِهِۦ خَسِرَ ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةَ ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱلْمُبِينُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசந்தேகத்துடன் அல்லாஹ்வை வணங்குபவரும் மக்களில் இருக்கின்றார். அவருக்கு நன்மை (-செல்வம்) கிடைத்தால் அதைக் கொண்டு திருப்தியடைகிறார். அவருக்கு சோதனை (-நெருக்கடி) ஏற்பட்டால் தனது (இறை நிராகரிப்பின்) முகத்தின் மீதே திரும்பி விடுகிறார். அவர் இவ்வுலகிலும் மறு உலகிலும் நஷ்டமடைந்து விட்டார். இதுதான் தெளிவான (பெரும்) நஷ்டமாகும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், சந்தேகத்துடன் அல்லாஹ்வை வணங்குபவரும் மக்களில் இருக்கிறார். ஆக, அவருக்கு செல்வம் கிடைத்தால் அதனால் அவர் திருப்தியடைகிறார். இன்னும், அவருக்கு சோதனை ஏற்பட்டால் தனது (நிராகரிப்பின்) முகத்தின் மீதே அவர் திரும்பி விடுகிறார். அவர் இவ்வுலகிலும் மறு உலகிலும் நஷ்டமடைந்து விட்டார். இதுதான் தெளிவான (பெரிய) நஷ்டமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. மனிதரில் பலர் (மதில்மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்களை ஒரு நன்மை அடைந்தால் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70