caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 87

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:87

وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِى ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبْحَٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமீனுடையவரை நினைவு கூர்வீராக! அவர் கோபித்தவராக சென்றபோது. நாம் அவருக்கு நெருக்கடியை கொடுக்கவே மாட்டோம் என்று எண்ணினார். அவர் இருள்களில் இருந்தவராக அழைத்தார், “நிச்சயமாக உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. நீ மகா பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் சேர்ந்து விட்டேன்.”
Tamil Translation - Omar Sharifஇன்னும், மீனுடையவரை நினைவு கூர்வீராக! அவர் கோபித்தவராக சென்றபோது, நாம் அவருக்கு அறவே நெருக்கடியை கொடுக்க மாட்டோம் என்று எண்ணினார். ஆக, அவர் இருள்களில் இருந்தவராக (என்னை) அழைத்தார், “நிச்சயமாக உன்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. நீ மகா பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் இருக்கிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi87. (யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக்கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70