فَٱسْتَجَبْنَا لَهُۥ فَكَشَفْنَا مَا بِهِۦ مِن ضُرٍّ وَءَاتَيْنَٰهُ أَهْلَهُۥ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِندِنَا وَذِكْرَىٰ لِلْعَٰبِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவருக்கு நாம் பதிலளித்தோம். அவருக்கு இருந்த தீங்குகளை (அவரைவிட்டு) அகற்றினோம். அவருக்கு அவருடைய குடும்பத்தையும் அவர்களுடன் அவர்கள் போன்றவர்களையும் அவருக்கு வழங்கினோம், நம் புறத்திலிருந்து (அவர் மீது) கருணையாக இருப்பதற்காகவும் வணக்கசாலிகளுக்கு நினைவூட்டலாக (-உபதேசமாக) இருப்பதற்காகவும்.
Tamil Translation - Omar Sharifஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். ஆக, அவருக்கு இருந்த நோயை (அவரை விட்டு) அகற்றினோம். இன்னும், அவருக்கு அவருடைய குடும்பத்தையும் அவர்களுடன் அவர்கள் போன்ற (மற்ற)வர்களையும் அவருக்கு வழங்கினோம், நம் புறத்திலிருந்து (அவர் மீது) கருணையாகவும் வணக்கசாலிகளுக்கு நினைவூட்டலாகவும் இருப்பதற்காக.
Tamil Translation - Abdulhamid Baqawi84. ஆகவே, நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்து, நம் அருளால் மேலும் அதைப் போன்ற தொகையினரையும் அவருக்குக் (குடும்பமாகக்) கொடுத்தோம். இது (எனக்குப் பயந்து) என்னை வணங்குபவர்களுக்கு(ம் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும்) நல்லுணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கிறது.