caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 42

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:42

قُلْ مَن يَكْلَؤُكُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحْمَٰنِ بَلْ هُمْ عَن ذِكْرِ رَبِّهِم مُّعْرِضُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! ரஹ்மானிடமிருந்து இரவிலும் பகலிலும் உங்களை பாதுகாப்பவர் யார்? மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரையை (-குர்ஆனை) புறக்கணிக்கிறார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! “இரவிலும் பகலிலும் உங்களை ரஹ்மானிடமிருந்து பாதுகாப்பவர் யார் இருக்கிறார்?” மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரையை (-குர்ஆனை) புறக்கணிக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi42. (நபியே! இவர்களை நோக்கி) ‘‘இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையில் இருந்து உங்களை பாதுகாப்பவர் யார்?'' என்று கேட்பீராக. எனினும் இவர்களோ தங்கள் இறைவனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70