وَجَعَلْنَا ٱلسَّمَآءَ سَقْفًا مَّحْفُوظًا وَهُمْ عَنْ ءَايَٰتِهَا مُعْرِضُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானத்தை பாதுகாக்கப்பட்ட (உயர்த்தப்பட்ட) ஒரு முகடாக நாம் ஆக்கினோம். அவர்கள் அதன் அத்தாட்சிகளைப் (பார்த்தும் நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக்கின்றார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், வானத்தை பாதுகாக்கப்பட்ட (உயர்த்தப்பட்ட) ஒரு முகடாக நாம் ஆக்கினோம். அவர்களோ அதில் உள்ள (சூரியன், சந்திரன், நட்ச்சத்திரம் போன்ற) அத்தாட்சிகளைப் (பார்த்தும் அவற்றை படைத்த அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக்கின்றார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. மேலும், வானத்தைப் பத்திரமான ஒரு முகட்டைப்போல் நாம்தான் அமைத்தோம். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவற்றிலுள்ள அத்தாட்சிகளை அவர்கள் புறக்கணிக்கின்றனர்.