caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 31

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:31

وَجَعَلْنَا فِى ٱلْأَرْضِ رَوَٰسِىَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமியில் நாம் மலைகளை ஏற்படுத்தினோம், அது (-பூமி) அவர்களுடன் சாய்ந்து விடாமல் இருப்பதற்காக. இன்னும் நாம் அவர்களுக்கு அதில் (-பூமியில்) விசாலமான பாதைகளை, அவர்கள் (அவற்றில் செல்ல) வழிபெறுவதற்காக ஏற்படுத்தினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பூமியானது, அவர்களுடன் சாய்ந்து விடாமல் இருப்பதற்காக பூமியில் நாம் மலைகளை ஏற்படுத்தினோம். இன்னும், அவர்கள் (தங்கள் வாழ்வாதாரத்தை நோக்கி) சரியாக செல்வதற்காக அவர்களுக்கு அதில் விசாலமான பாதைகளை ஏற்படுத்தினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi31. பூமி மனிதர்களுடன் சாய்ந்துவிடாதிருக்கும் பொருட்டு அதில் மலைகளை நாம்தான் நாட்டினோம். அவர்கள் விரும்பிய இடத்திற்கு சரியாக செல்லும் பொருட்டு அதில் விசாலமான வழிகளையும் நாம்தான் ஏற்படுத்தினோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70