caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 30

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:30

أَوَلَمْ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَٰهُمَا وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ أَفَلَا يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அறியவேண்டாமா? நிச்சயமாக வானங்களும் பூமியும் சேர்ந்து இருந்தன. நாம் தான் அவற்றைப் பிளந்தோம். இன்னும் தண்ணீரிலிருந்து உயிருள்ள எல்லா வஸ்துகளையும் ஏற்படுத்தினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்களா?
Tamil Translation - Omar Sharifஅவர்கள் அறியவேண்டாமா? “நிச்சயமாக வானங்களும் பூமியும் சேர்ந்து இருந்தன. நாம்தான் அவற்றைப் பிளந்(து பிரித்)தோம். இன்னும் உயிருள்ள எல்லா வஸ்துகளையும் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம். அவர்கள் (படைத்த இறைவனை) நம்பிக்கை கொள்ளமாட்டார்களா?”
Tamil Translation - Abdulhamid Baqawi30. (ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து, (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு உயிருள்ள ஒவ்வொன்றையும் (வாழ்ந்திருக்கச்) செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70