قَالَ فَٱذْهَبْ فَإِنَّ لَكَ فِى ٱلْحَيَوٰةِ أَن تَقُولَ لَا مِسَاسَ وَإِنَّ لَكَ مَوْعِدًا لَّن تُخْلَفَهُۥ وَٱنظُرْ إِلَىٰٓ إِلَٰهِكَ ٱلَّذِى ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا لَّنُحَرِّقَنَّهُۥ ثُمَّ لَنَنسِفَنَّهُۥ فِى ٱلْيَمِّ نَسْفًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் (மூஸா) கூறினார்: நீ சென்று விடு. இவ்வாழ்க்கையில் “லாமிஸாஸ்” (என்னைத்) தொடாதீர் என்று சொல்வதுதான் நிச்சயமாக உனக்கு நிகழும். இன்னும் உமக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு. அதை நீ தவறவிடமாட்டாய். நீ வணங்கியவனாக இருந்த உனது தெய்வத்தைப் பார். நிச்சயமாக நாம் அதை எரித்து விடுவோம். பிறகு அதை கடலில் பரப்பிவிடுவோம்.
Tamil Translation - Omar Sharif(மூஸா) கூறினார்: ஆக, நீ சென்று விடு. இவ்வாழ்க்கையில் “லா மிஸாஸ்” (என்னைத்) தொடாதீர் என்று நீ (சதா) சொல்லியவனாக இருப்பதுதான் நிச்சயமாக உனக்கு நிகழும். இன்னும், உமக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு. அதை நீ தவறவிடமாட்டாய். நீ எதை வணங்கியவனாக இருந்தாயோ அந்த உனது தெய்வத்தைப் பார். நிச்சயமாக நாம் அதை எரித்து விடுவோம். பிறகு, நிச்சயமாக அதை (-அதன் சாம்பலை) கடலில் பரப்பிவிடுவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi97. அதற்கு மூஸா (அவனை நோக்கி ‘‘இங்கிருந்து) அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எவரைக் கண்டபோதிலும்) ‘‘என்னைத் தீண்டாதீர்கள்'' என்று கூறித்திரிவதுதான் இவ்வுலகத்தில் உனக்குரிய தண்டனை. (மறுமையிலோ) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட கொடிய வேதனையுண்டு. நீ அதிலிருந்து தப்பவே மாட்டாய். இதோ! நீ ஆராதனை செய்து கொண்டிருந்த தெய்வத்தைப் பார். நிச்சயமாக நான் அதை உருக்கி(ப் பஸ்பமாக்கி) கடலில் தூற்றி விடுவேன்'' என்றும் கூறினார்.