قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوا۟ بِهِۦ فَقَبَضْتُ قَبْضَةً مِّنْ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذْتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتْ لِى نَفْسِى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் கூறினான்: எதை அவர்கள் (மக்கள்) பார்க்கவில்லையோ அதை நான் பார்த்தேன். தூதரின் காலடி சுவடிலிருந்து ஒரு பிடி (மண்னை) எடுத்து எறிந்தேன். இப்படித்தான் எனக்கு என் மனம் அலங்கரித்தது.
Tamil Translation - Omar Sharifஅவன் கூறினான்: “எதை (மக்கள்) பார்க்கவில்லையோ அதை நான் பார்த்தேன். ஆகவே, (மூஸாவை பார்க்க வந்த வானத்) தூதருடைய (குதிரையின்) காலடி சுவட்டிலிருந்து ஒரு பிடி (மண்ணை) எடுத்து, (காளைக் கன்றின் சிலையில்) எறிந்தேன். இப்படித்தான் எனக்கு என் மனம் (இந்த தீய செயலை நான் செய்ய வேண்டும் என்று) அலங்கரித்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi96. அதற்கவன் ‘‘அவர்கள் பார்க்காத ஒன்றை நான் பார்த்தேன். (வானவத்) தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது.) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது'' என்று கூறினான்.