caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 94

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:94

قَالَ يَبْنَؤُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِى وَلَا بِرَأْسِىٓ إِنِّى خَشِيتُ أَن تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِى

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் (ஹாரூன்) கூறினார்: என் தாயின் மகனே! எனது தாடியையும் என் தலை (முடி)யையும் பிடிக்காதே! நிச்சயமாக “என் கூற்றை நீர் கவனிக்காமல் இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் பிரித்து விட்டாய்!” என்று நீர் கூறிவிடுவதை நான் பயந்தேன்.
Tamil Translation - Omar Sharif(ஹாரூன்) கூறினார்: “என் தாயின் மகனே! எனது தாடியையும் என் தலை (முடி)யையும் பிடி(த்திழு)க்காதே! “என் கூற்றை நீர் கவனிக்காமல் இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் பிரிவினை செய்து விட்டாய்!” என்று நீர் கூறிவிடுவதை நிச்சயமாக நான் பயந்தேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi94. அதற்கவர் ‘‘என் தாய் மகனே! என் தலையையும் என் தாடியையும் பிடி(த்திழு)க்காதீர். (நான் அச்சமயமே அவர்களை விட்டு விலகி இருந்தால்) ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளுக் கிடையில் நீ பிரிவினையை ஏற்படுத்தி விட்டாய். என் வார்த்தைகளை நீ கவனிக்கவில்லை என்று என்னை நீர் கடுகடுப்பீர் என நிச்சயமாக நான் பயந்(துதான் அவர்களுடன் இருந்)தேன்'' எனக் கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70