caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 88

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:88

فَأَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهُۥ خُوَارٌ فَقَالُوا۟ هَٰذَآ إِلَٰهُكُمْ وَإِلَٰهُ مُوسَىٰ فَنَسِىَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் அவர்களுக்கு ஒரு காளைக் கன்றை அதற்கு -மாட்டின் சப்தத்தை உடைய ஓர் உடலை- உருவாக்கினான். (இதைப் பார்த்த சில மக்கள்) கூறினர்: இதுதான் உங்களது தெய்வமும் மூஸாவுடைய தெய்வமும் ஆகும். ஆனால் அவர் மறந்து (எங்கே சென்று) விட்டார்.
Tamil Translation - Omar Sharifஆக, அவன் அவர்களுக்கு ஒரு காளைக் கன்றை, அதாவது (காளைக் கன்றின் உருவத்தில் செய்யப்பட்ட உயிரற்ற) ஓர் உடலை உருவாக்கினான். அதற்கு மாட்டின் சத்தம் இருந்தது. ஆக, (இதைப் பார்த்தவர்களில் சிலர்) கூறினார்கள்: “இதுதான் உங்கள் தெய்வமும் மூஸாவுடைய தெய்வமும் ஆகும். ஆனால், அவர் (அதை) மறந்து(விட்டு எங்கோ சென்று) விட்டார்.”
Tamil Translation - Abdulhamid Baqawi88. பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். ஆனால் அவர் (இதை) மறந்து (விட்டு மலைக்குச் சென்று)விட்டார்'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70