قَالُوا۟ مَآ أَخْلَفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلَٰكِنَّا حُمِّلْنَآ أَوْزَارًا مِّن زِينَةِ ٱلْقَوْمِ فَقَذَفْنَٰهَا فَكَذَٰلِكَ أَلْقَى ٱلسَّامِرِىُّ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறினார்கள்: “உமது குறிப்பிட்ட நேரத்திற்கு நாங்கள் எங்கள் விருப்பப்படி மாறுசெய்யவில்லை. என்றாலும் நாங்கள் (ஃபிர்அவ்னுடைய) மக்களின் ஆபரணங்களில் பலசுமைகளை நாங்கள் சுமத்தப்பட்டோம். ஆகவே, அவற்றை நாங்கள் (நெருப்பில்) எறிந்தோம். அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “உமது குறிப்பிட்ட நேரத்திற்கு (வராமல்) நாங்கள் எங்கள் விருப்பப்படி மாறுசெய்யவில்லை. என்றாலும் நாங்கள் (ஃபிர்அவ்னுடைய) மக்களின் ஆபரணங்களில் இருந்து பல சுமைகளை நாங்கள் சுமக்கும்படி ஏவப்பட்டோம். பிறகு, அவற்றை நாங்கள் (நெருப்பில்) எறிந்தோம். ஆக, அவ்வாறே சாமிரியும் (தன்னிடமுள்ளதை) எறிந்தான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi87. அதற்கவர்கள் ‘‘நாங்கள் உமக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் இஷ்டப்படி மாறுசெய்யவில்லை. ஆனால், நாங்கள் சுமந்துகொண்டு வந்த (ஃபிர்அவ்னுடைய) மக்களின் நகைகளை (நெருப்பில் எறியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு அதில் அவற்றை) நாங்கள் எறிந்தோம். அவ்வாறே ஸாமிரீயும் (தன்னிடமிருந்த நகைகளை) எறிந்தான்.