فَرَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوْمِهِۦ غَضْبَٰنَ أَسِفًا قَالَ يَٰقَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا أَفَطَالَ عَلَيْكُمُ ٱلْعَهْدُ أَمْ أَرَدتُّمْ أَن يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّن رَّبِّكُمْ فَأَخْلَفْتُم مَّوْعِدِى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉடனே தனது சமுதாயத்திடம் கோபமானவராக, கவலையடைந்தவராக மூஸா திரும்பினார். என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகிய வாக்கை வாக்களிக்கவில்லையா? (என்னை விட்டுப் பிரிந்த) காலம் உங்களுக்கு தூரமாகிவிட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவன் புறத்திலிருந்து கோபம் இறங்குவதை நீங்கள் நாடுகிறீர்களா? அதனால் எனது குறிப்பிட்ட நேரத்திற்கு (வராமல்) மாறு செய்தீர்களா? என்று (மூஸா) கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, மூஸா கோபமுற்றவராக, கவலையடைந்தவராக தனது சமுதாயத்திடம் திரும்பினார். அவர் கூறினார்: “என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகிய வாக்கை வாக்களிக்கவில்லையா? (என்னை விட்டுப் பிரிந்த) காலம் உங்களுக்கு தூரமாகிவிட்டதா? அல்லது, உங்கள் மீது உங்கள் இறைவன் புறத்திலிருந்து கோபம் இறங்குவதை நீங்கள் நாடுகிறீர்களா? அதனால் என் (இறைவன் நமக்கு) குறிப்பிட்ட நேரத்திற்கு (வராமல்) மாறு செய்தீர்களா?”
Tamil Translation - Abdulhamid Baqawi86. (உடனே) மூஸா பெரும் துக்கத்துடன் கோபம் கொண்டவராகத் தன் மக்களிடம் திரும்பி வந்து ‘‘என் மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு(த் தவ்றாத் என்னும் வேதத்தைத் தருவதாக) அழகான வாக்குறுதி அளிக்கவில்லையா? அவன் வாக்குறுதி அளித்து உங்களுக்கு அதிக நாட்களாகி விட்டனவா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனின் கோபம் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியே எனக்குச் செய்த வாக்குறுதிக்கு நீங்கள் மாறு செய்தீர்களா?'' என்று கேட்டார்.