caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 80

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:80

يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ قَدْ أَنجَيْنَٰكُم مِّنْ عَدُوِّكُمْ وَوَٰعَدْنَٰكُمْ جَانِبَ ٱلطُّورِ ٱلْأَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇஸ்ரவேலர்களே! திட்டமாக உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களை நாம் பாதுகாத்தோம். உங்களுக்கு தூர் மலையின் வலது பகுதியை வாக்களித்தோம். உங்கள் மீது “மன்னு” “ஸல்வா” ஐ இறக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஇஸ்ரவேலர்களே! திட்டமாக உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களை நாம் பாதுகாத்தோம். இன்னும், தூர் மலையின் வலது பகுதியை (நீங்கள் வந்தடையும்போது அங்கு தவ்ராத் கொடுக்கப்படும் என்று) உங்களுக்கு வாக்களித்தோம். இன்னும், உங்கள் மீது “மன்னு” “ஸல்வா” வை இறக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi80. இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி ‘தூர்' என்னும் மலையின் வலது பாக(ம் வந்தால் உங்களுக்குத் தவ்றாத்)த்தை(த் தருவதாக) வாக்களித்து (உணவு கிடைக்காத பாலைவனத்தில்) உங்களுக்கு ‘மன்னு சல்வா'வையும் இறக்கிவைத்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70