كُلُوا۟ مِن طَيِّبَٰتِ مَا رَزَقْنَٰكُمْ وَلَا تَطْغَوْا۟ فِيهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِى وَمَن يَحْلِلْ عَلَيْهِ غَضَبِى فَقَدْ هَوَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து புசியுங்கள். அதில் எல்லை மீறாதீர்கள். உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். எவன் மீது என் கோபம் இறங்கி விடுகிறதோ திட்டமாக அவன் (துர்பாக்கியத்தில்) வீழ்ந்து விடுவான்.
Tamil Translation - Omar Sharifநாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து புசியுங்கள். அதில் எல்லை மீறாதீர்கள். (வாழ்வாதாரத்தை தேடுவதிலும் அதை செலவழிப்பதிலும் என் கட்டளையை மீறாதீர்கள்! அப்படி மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். இன்னும், எவன் மீது என் கோபம் இறங்கிவிடுமோ திட்டமாக அவன் (துர்ப்பாக்கியமடைந்து நரகத்தில்) வீழ்ந்து விடுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi81. நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதைப் புசித்து வாருங்கள். அதில் நீங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள். (மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக அழிந்தே விடுவான்.