قَالُوا۟ لَن نُّؤْثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلْبَيِّنَٰتِ وَٱلَّذِى فَطَرَنَا فَٱقْضِ مَآ أَنتَ قَاضٍ إِنَّمَا تَقْضِى هَٰذِهِ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَآ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-சூனியக்காரர்கள்) கூறினர்: “தெளிவான அத்தாட்சிகளில் இருந்து எங்களிடம் வந்ததை விடவும் எங்களைப் படைத்தவனை விடவும், உம்மை நாம் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே, நீ எதை செய்பவனாக இருக்கிறாயோ அதை நீ செய்! நீ செய்வதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில் தான். (எங்களது மறுமையை நீ ஒன்றும் செய்துவிட முடியாது.)
Tamil Translation - Omar Sharif(சூனியக்காரர்கள்) கூறினார்கள்: “தெளிவான அத்தாட்சிகளில் இருந்து எங்களிடம் எது வந்ததோ அதை விடவும்; இன்னும், எங்களைப் படைத்த (இறை)வனை விடவும் உன்னை (பின்பற்றுவதை) நாம் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே, நீ எதை (முடிவு) செய்பவனாக இருக்கிறாயோ அதை நீ (முடிவு) செய்! நீ செய்வதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில்தான். (எங்களது மறுமையை நீ ஒன்றும் செய்துவிட முடியாது.)”
Tamil Translation - Abdulhamid Baqawi72. அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ முடிவு செய்துகொள். நீ முடிவு செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்.