caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Taa-Haa அத்தியாயம், வசனம் 73

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 45 · 20:73

إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغْفِرَ لَنَا خَطَٰيَٰنَا وَمَآ أَكْرَهْتَنَا عَلَيْهِ مِنَ ٱلسِّحْرِ وَٱللَّهُ خَيْرٌ وَأَبْقَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டோம், எங்களுக்கு எங்கள் பாவங்களையும் சூனியத்தில் எதை செய்வதற்கு நீ எங்களை நிர்ப்பந்தித்தாயோ அதையும் அவன் மன்னிப்பதற்காக. அல்லாஹ்தான் (நற்கூலி கொடுப்பதில்) மிகச் சிறந்தவன். (தண்டிப்பதில்) மிக நிரந்தரமானவன்.
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டோம், அவன் எங்களுக்கு எங்கள் பாவங்களையும் சூனியம் செய்வதற்கு நீ எங்களை நிர்ப்பந்தித்ததையும் அவன் மன்னிக்க வேண்டும் என்பதற்காக. அல்லாஹ், (நற்கூலி கொடுப்பதில்) மிகச் சிறந்தவன், (தண்டிப்பதில்) மிக நிரந்தரமானவன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi73. நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்கள் குற்றங்களையும் உன் நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலையானவனும் ஆவான்'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70