قَالَ بَلْ أَلْقُوا۟ فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: மாறாக நீங்கள் எறியுங்கள். ஆக, (அவர்கள் எறிந்த)அப்போது அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தால் அவருக்கு (-மூஸாவுக்கு) அவை ஓடுவதாக தோற்றமளிக்கப்பட்டது.
Tamil Translation - Omar Sharif(மூஸா) கூறினார்: “மாறாக, (முதலாவதாக) நீங்கள் எறியுங்கள்.” ஆக, அ(வர்கள் எறிந்த அ)ப்போது அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தால் நிச்சயமாக அவை ஓடுவதாக அவருக்கு தோற்றமளிக்கப்பட்டது.
Tamil Translation - Abdulhamid Baqawi66. அதற்கவர், ‘‘இல்லை! நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்'' என்று கூறினார். (அவர்கள் எறியவே, எறியப்பட்ட) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவதுபோல் இவருக்குத் தோன்றின.