مِنْهَا خَلَقْنَٰكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதிலிருந்துதான் உங்களைப் படைத்தோம். அதில்தான் உங்களை மீட்டுக் கொண்டுவருவோம். அதிலிருந்துதான் மற்றொருமுறை உங்களை (உயிருள்ளவர்களாக) வெளியேற்றுவோம்.
Tamil Translation - Omar Sharifஅதிலிருந்துதான் உங்களைப் படைத்தோம். இன்னும், அதில்தான் உங்களை திரும்பக் கொண்டுவருவோம். இன்னும், அதிலிருந்துதான் மற்றொரு முறை உங்களை வெளியேற்றுவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே உங்களை மீண்டும் சேர்த்து விடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.'' (இவ்வாறு ஃபிர்அவ்னிடம் மூஸா கூறினார்.)