فَقُولَا لَهُۥ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهُۥ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு மென்மையான சொல்லை இருவரும் கூறுவீர்களாக! அவன் நல்லறிவு பெறுகிறானா, அல்லது பயப்படுகிறானா? (என்று பாருங்கள்).
Tamil Translation - Omar Sharifஆக, அவனுக்கு (நீர் உபதேசம் செய்யும்போது) மென்மையான சொல்லை நீங்கள் இருவரும் சொல்லுங்கள்! அவன் (உங்கள் உபதேசத்தால்) நல்லறிவு பெறலாம், அல்லது (அல்லாஹ்வை) பயப்படலாம்.
Tamil Translation - Abdulhamid Baqawi44. நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்'' (என்றும் கூறினோம்.)