وَقَالُوا۟ لَوْلَا يَأْتِينَا بِـَٔايَةٍ مِّن رَّبِّهِۦٓ أَوَلَمْ تَأْتِهِم بَيِّنَةُ مَا فِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் கூறினார்கள்: இவர் (-முஹம்மது நபி) தன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரமாட்டாரா? என்று. முந்திய வேதங்களில் உள்ள தெளிவான சான்று(கள்) அவர்களிடம் வரவில்லையா?
Tamil Translation - Omar Sharif“இவர் தன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரமாட்டாரா?” என்று (இணைவைப்பவர்கள்) கூறுகிறார்கள். முந்திய வேதங்களில் உள்ளதை தெளிவுப்படுத்தும் (-குர்ஆன் என்னும்) உறுதியான சான்று அவர்களிடம் வரவில்லையா?
Tamil Translation - Abdulhamid Baqawi133. (‘‘இறைவனின் தூதராகிய) அவர் தன் இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) நம்மிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். முந்திய வேதங்களிலுள்ள தெளிவான ஆதாரங்கள் அவர்களிடம் வரவில்லையா? (வந்தே இருக்கிறது.)