وَكَذَٰلِكَ أَنزَلْنَٰهُ قُرْءَانًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ مِنَ ٱلْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறே, இதை (இந்த வேதத்தை) அரபி மொழியிலான குர்ஆனாக இறக்கினோம். அதில் எச்சரிக்கையை பலவாறாக நாம் விவரித்து இருக்கிறோம். அவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக அல்லது அது, (இந்த குர்ஆன்) அவர்களுக்கு ஓர் அறிவுரையை ஏற்படுத்துவதற்காக (நாம் இதை இறக்கினோம்).
Tamil Translation - Omar Sharifஇவ்வாறே, இ(ந்த வேதத்)தை அரபி மொழியிலான குர்ஆனாக இறக்கினோம். இன்னும், அதில் எச்சரிக்கையை பலவாறாக விவரித்து (கூறி) இருக்கிறோம், அவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக; அல்லது அது, அவர்களுக்கு ஒரு நல்ல புத்தியை ஏற்படுத்துவதற்காக.
Tamil Translation - Abdulhamid Baqawi113. இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். இது அவர்களுக்கு நல்லுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் (பாவத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காகவும் இதில் (நாம் நம் வேதனையைப் பற்றி) எச்சரிக்கைகளை விவரித்தோம்.